உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: உலக நெ.1 வீரா் ஷி யூக்கியை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி அபார சாதனை
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், 21 வயதான இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வெற்றியைப் பதிவு செய்துள்ளார். உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான சீனாவின் ஷி யூக்கியை எதிர்கொண்ட ஆயுஷ், அவரை வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றினார். இதற்கு முன் ஷி யூக்கியுடன் மோதிய மூன்று போட்டிகளிலும் ஆயுஷ் தோல்வியையே சந்தித்திருந்தார். குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஷியிடம் தோல்வியடைந்த ஆயுஷ், இந்த முறை சொந்த மண்ணில் தீவிர உத்தியுடன் களமிறங்கினார். "ஆகஸ்ட் 17 யூக்கிக்கு ஒரு கெட்ட நாளாக அமையும்" என்று பயிற்சியாளர் விமல்குமார் அளித்த ஊக்கத்தை மனதில் கொண்டு ஆயுஷ் சிறப்பாக விளையாடினார்.
திருப்பங்கள்
பரபரப்பான மூன்று செட் ஆட்டத்தின் திருப்பங்கள்
அதிரடியான சவால்கள் நிறைந்த இப்போட்டியில் ஆயுஷ் ஷெட்டி தனது திட்டமிட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தொடக்கம் முதலே கவனமாக ஆடிய ஆயுஷ், எதிராளியின் நகர்வுகளைக் கணித்து தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டு முதல் செட்டை 21-14 எனப் போராடித் தன்வசப்படுத்தினார்.
இரண்டாம் செட்டில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷி யூக்கி 21-13 என்ற புள்ளிக் கணக்கில் மீண்டெழுந்து செட்களை சமன் செய்தார்.
வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் 16-5 எனப் பிரம்மாண்ட முன்னிலை பெற்ற ஆயுஷ், பின்னர் ஷியின் அதிரடி மீட்சியால் 19-20 என நெருக்கடிக்கு உள்ளானார்.
மன உறுதி
மன உறுதியால் சாதித்த இந்திய இளம் புயல்
கடைசி தருணத்தில் நிலவிய கடும் அழுத்தத்தையும் மன உளைச்சலையும் கட்டுப்படுத்திய ஆயுஷ் ஷெட்டி, தனது திறமையான புஷ் ஷாட் மூலம் ஆட்டத்தைத் தனது பக்கமாகத் திருப் 21-19 என்ற கணக்கில் இறுதிச் செட்டைக் கைப்பற்றினார்.
முடிவில் 21-14, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் உலக நெ.1 வீரரை வீழ்த்திய ஆயுஷ் ஷெட்டி, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று இந்திய ரசிகர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.