அமெரிக்க படைவீரர்களை கொன்றால் $30,000 பரிசு: ஈரானின் அறிவிப்பால் உச்சகட்டப் பதற்றம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்களை கொல்பவர்கள் அல்லது சிறைபிடிப்பவர்களுக்கு $30,000 (சுமார் 5 பில்லியன் டோமான்கள்) பணமுடிப்பு வழங்கப்படும் என ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து இந்த நிதி உதவி மற்றும் பரிசுத் திட்டம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள தளபதி ஹதாமி, "அக்கிரமிப்பு அமெரிக்க ராணுவ பணியாளர்களைக் கொன்று அல்லது உயிருடன் பிடித்துக் கொடுக்கும் எவருக்கும் இந்தத் தொகை வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி
நிதி ஜிகாத் மூலம் பணமுடிப்பு
மேலும், இந்த வீரம் செறிந்த செயலை ஈரானிய பெண்கள் மேற்கொண்டால், அவர்களுக்கு இந்த வெகுமதி இரட்டிப்பாக ($60,000) வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை ஈரானிய ராணுவமே அதன் சந்தை மதிப்பை விட இருமடங்கு அதிக விலைக்கு வாங்கி அருங்காட்சியகத்தில் வைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
அமெரிக்கப் படைகளுக்கான ஈரானின் எச்சரிக்கை
அமெரிக்கப் படைகள் பிராந்தியத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஈரான் ராணுவம், பெர்சிய வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் அமெரிக்கப் படைகள் நுழைய இனி அனுமதியில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரானிய எல்லைக்குள் நேரடி அமெரிக்கத் தரைப்படைகளின் ஊடுருவல்கள் ஏதும் இல்லாத போதிலும், ஈரானின் இந்த அறிவிப்பு அமெரிக்கப் படைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை
தொடரும் மோதலும் முடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தையும்
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அவ்வப்போது நேரடி மற்றும் மறைமுக மோதல்கள் நீடித்து வருகின்றன.
ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்தமும், ஜூன் மாத அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியும் தோல்வியில் முடிந்தன.
இப்போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 17 அமெரிக்க ராணுவப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்த புதிய அறிவிப்பால் வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.