பாக்சிங் டே டெஸ்டில் பரிதாப தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்தியாவின் எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 5வது நாளில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் நான்கு போட்டிகள் முடிவில் 2-1 என முன்னிலை பெற்றது.
கேப்டன் பாட் கம்மின்ஸ் முன்னணியில் இருந்து, தனது சிறப்பான ஆல்ரவுண்ட் செயல்பாட்டிற்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
அவர் இதில் 90 ரன்கள் எடுத்தார் மற்றும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முன்னதாக, கடைசி நாளில் இந்தியா 340 ரன்கள் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்டது. ஆனால் ஆரம்பத்தில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை இழந்தது.
சொதப்பல்
இந்தியாவின் பேட்டிங் சொதப்பல்
இந்திய கிரிக்கெட் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (84) மற்றும் ரிஷப் பண்ட் (30) ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை மீட்க முயற்சி செய்தாலும், அது பலனளிக்கவில்லை.
இதனால், இந்தியா ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களிடம் 79.1 ஓவர்களில் 155 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலன்ட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர், அதே நேரத்தில் நாதன் லயன் இரண்டு விக்கெட்களை சேர்த்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் பண்டைத் தவிர வேறு எந்தவொரு வீரரும் இரட்டை இலக்கத்தில் ரன் குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் வாய்ப்பு
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பிடிக்கும் ஆஸ்திரேலியாவின் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
எனினும், இன்னும் மோதலில் உள்ள இந்தியா, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை நீட்டிக்க, ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் கடைசி டெஸ்டில் வெற்றி பெற வேண்டும்.
அதே நேரம், ஆஸ்திரேலியா இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இறுதி செய்துவிடும்.
தோல்வி அடையும்பட்சத்தில், அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியா vs இலங்கை தொடரின் முடிவைப் பொறுத்து இறுதிப் போட்டிக்கான அணி தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.