
INDvsAUS முதல் ODI: மழையால் பாதிக்கப்பட்ட முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், மழை குறுக்கீட்டால் ஆட்டம் குறைக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தித் தொடரில் முன்னிலை பெற்றது. பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களின் ஆரம்பகாலச் சரிவுக்குப் பிறகு டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் (DLS) முறைப்படி ஆட்டத்தின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா, ஆரம்பத்திலேயே ரோஹித் ஷர்மா (8) மற்றும் விராட் கோலி (0) ஆகிய இரு முக்கிய வீரர்களையும் விரைவாக அவுட்டாக்கிக் கலக்கியது.
35 ஓவர்கள்
35 ஓவர்களாகக் குறைப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் சரிந்த போதிலும், மிடில் ஆர்டரில் கே.எல்.ராகுல் (38) மற்றும் அக்ஷர் படேல் (31) ஆகியோரின் பங்களிப்பால் இந்தியா 136 ரன்களை எட்டியது. ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களில் மேத்யூ குன்ஹெமன், மிட்ச் ஓவன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். மழையின் குறுக்கீட்டால், DLS முறைப்படி ஆஸ்திரேலியாவின் இலக்கு 26 ஓவர்களில் 131 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா டிராவஸ் ஹெட் மற்றும் மேட் ஷார்ட் ஆகியோரை விரைவாக இழந்தாலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஜோஷ் பிலிப்பின் 37 ரன்களின் ஆதரவுடன் ஆஸ்திரேலியா இலக்கை எளிதாக எட்டியது.