Page Loader
ATP Finals : அரையிறுதியில் தோற்று வெளியேறியது ரோஹன் போபண்ணா ஜோடி
அரையிறுதியில் தோற்று வெளியேறியது ரோஹன் போபண்ணா ஜோடி

ATP Finals : அரையிறுதியில் தோற்று வெளியேறியது ரோஹன் போபண்ணா ஜோடி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 18, 2023
07:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் அடங்கிய ஜோடி ஏடிபி பைனல்ஸ் 2023 ஆடவர் டென்னிஸ் இரட்டையர் அரையிறுதியில் தோல்வியைத் தழுவியது. இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், ஸ்பெயினின் மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் அர்ஜென்டினாவின் ஹோராசியோ ஜெபலோஸ் ஜோடியை எதிர்கொண்ட இவர்கள் 5-7, 4-6 என்ற சேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவினர். இதற்கு முன்னர் 2012 மற்றும் 2015 இல் முறையே சக இந்திய வீரரான மகேஷ் பூபதி மற்றும் ருமேனியாவின் புளோரின் மெர்கியாவுடனும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இரண்டு முறையும் தோல்வியடைந்தார். ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை இதுவரை எந்த இந்தியரும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ரோஹன் போபண்ணா- மேத்யூ எப்டன் அரையிறுதியில் தோல்வி