NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாய்மர படகில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விஷ்ணு சரவணனின் பின்னணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாய்மர படகில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விஷ்ணு சரவணனின் பின்னணி
    பாய்மர படகில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விஷ்ணு சரவணனின் பின்னணி

    பாய்மர படகில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விஷ்ணு சரவணனின் பின்னணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2023
    02:17 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் பாய்மரப் படகு வீரரான விஷ்ணு சரவணன் சீனாவின் ஹாங்சோவில் புதன்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் ஆடவர் டிங்கி ஐஎல்சிஏ-7 நிகழ்வில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

    சவாலான 11-பந்தயப் போட்டியின் மூலம் 34 புள்ளிகளைப் பெற்று வெண்கலத்தை உறுதி செய்தார்.

    இந்த சாதனையின் மூலம் பாய்மரப்போட்டியில் நாட்டின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

    இந்த போட்டியில் தென் கொரியாவின் ஜீமின் எச்ஏ 33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்ததால், சரவணன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிங்கப்பூரின் ஜுன் ஹான் ரியான் லோ 26 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

    vishnu saravanan cliches bronze in sailing

    யார் இந்த விஷ்ணு சரவணன்?

    வேலூரைச் சேர்ந்த இராணுவ வீரரும் பாய்மர படகு வீரருமான தனது தந்தை ராமச்சந்திரன் சரவணனால் ஈர்க்கப்பட்டு விஷ்ணு சரவணன் இந்த விளையாட்டில் இணைந்தார்.

    17 வயதானபோது, விஷ்ணு 2015இல் மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் குரூப் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் கேடட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பின்னர், இந்திய இராணுவத்தில் நைப் சுபேதாராகச் சேர்ந்தார். இந்திய ராணுவத்தின் ஆதரவுடன் பயிற்சியை தொடர்ந்த விஷ்ணு சரவணன் தனது முதல் மூத்த தேசிய சாம்பியன்ஷிப்பை 2018இல் வென்றார்.

    உச்சகட்டமாக 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 20வது இடம் பிடித்த நிலையில், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

    அவரது சகோதரி ரம்யா சரவணனும் பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தியா

    சமீபத்திய

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    'பெருமை மிகு தருணம்' : இந்திய ஹாக்கி வீரர் கிருஷன் பதக் நெகிழ்ச்சி இந்திய ஹாக்கி அணி
    Sports Round Up: இந்திய அணியிலிருந்து ஷிவம் மாவி நீக்கம்; டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள் இந்திய அணி
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி நிச்சயம்; நீரஜ் சோப்ரா நம்பிக்கை நீரஜ் சோப்ரா
    ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கங்களை குவிக்க தயாராகும் 13 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை அணி குத்துச்சண்டை

    இந்தியா

    Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    IND vs AUS: இந்தூரில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? கிரிக்கெட்
    வீடியோ: வேலூரில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பர்தா அணிந்து நடனமாடிய நபர் கைது தமிழ்நாடு
    சென்னையிலுள்ள கடற்கரைகளில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு கடற்கரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025