NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு படைத்த இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு படைத்த இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு படைத்த இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு படைத்த இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 01, 2023
    11:38 am

    செய்தி முன்னோட்டம்

    சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) இந்தியாவின் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக் வெள்ளி வென்று வரலாறு படைத்தார்.

    மகளிர் தனிநபர் கோல்ஃப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அதிதி அசோக் நான்கு சுற்றுகள் முடிவில் 271 க்கு கீழ் 17 புள்ளிகளுடன் போட்டியை முடித்து இரண்டாவது இடம் பிடித்தார்.

    முன்னதாக, முதல் மூன்று சுற்றுகள் முடிவில் முதலிடத்தில் இருந்த அதிதி தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை கொண்டிருந்தார்.

    எனினும், கடைசி சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் அர்பிச்சாயா யுபோல் அதிதி அசோக்கை பின்னுக்குத் தள்ளி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    aditi ashok first female golf player secured asian games medal

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாறு படைத்த அதிதி அசோக்

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக் பதக்கம் வென்றதன் மூலம், இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    ஆசிய விளையாட்டில் கோல்ஃபில் இந்தியா இதற்கு முன்பு ஆறு பதக்கங்களை வென்றது. ஆனால் அவை அனைத்தும் ஆடவர் பிரிவில் இந்திய வீரர்களால் பெறப்பட்டது.

    மேலும், இதற்கு முன்பு கடைசியாக 2010இல் தான் ஆடவர் பிரிவிலும் இந்தியா பதக்கத்தை வென்றிருந்தது.

    இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டி கோல்ஃப் விளையாட்டில் இந்தியா பெற்ற முதல் ஆசியப் பதக்கமாகவும் இது அமைந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தியா

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    Sports Round Up: மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்; இந்திய வாலிபால் அணி காலிறுதிக்கு தகுதி; டாப் விளையாட்டு செய்திகள் மல்யுத்தம்
    சீனாவிற்கு எதிராக விளையாட்டு வீரர்கள் விவகாரத்தில் வலுவான எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் இந்தியா இந்தியா
    Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள் கிரிக்கெட்
    Asian Games 2023: முதல் நாளிலேயே பதக்க வேட்டையைத் தொடங்கிய இந்தியா சீனா

    இந்தியா

    இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலையை கட்டமைக்கத் திட்டமிட்டு வரும் டொயோட்டா கார்
    யூடியூபர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி நரேந்திர மோடி
    ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம் வென்றது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    "நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025