ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர்
25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் போட்டியானது தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், 400மீ.,தடை தாண்டும் போட்டியில் தமிழ்நாடு மாநிலத்தினை சேர்ந்த சந்தோஷ் 49.09 வினாடிகளில் தனது இலக்கினை அடைந்து வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார். இவர் வென்ற இப்பதக்கம் இந்திய நாட்டிற்கு கிடைத்துள்ள 10வது பதக்கமாகும். இதனை தொடர்ந்து கத்தார் நாட்டினை சேர்ந்த முகமது ஹெமெய்டா பாஸேம் 48.64 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்க பதகத்தினையும், ஜப்பான் நாட்டினை சேர்ந்த யுசாகு கோடாமா 48.96 வினாடிகளில் கடந்து 2ம் இடத்தினை பிடித்து வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடவேண்டியவை.
மகளிருக்கான 100மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றுள்ளார்
மேலும், மகளிருக்கான 100மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனையான ஜோதி யாராஜி அவர்கள் தங்க பதக்கத்தினை வென்றுள்ளார். ஜோதி யாராஜிக்கு 23 வயதாகும் பட்சத்தில், அவர் 13.09 வினாடிகளில் தனது இலக்கினை அடைந்து முதலிடம் பிடித்து வெற்றி அடைந்துள்ளார். இவரை தொடர்ந்து ஜப்பான் நாட்டினை சேர்ந்த வீராங்கனைகள் இப்போட்டியில் அடுத்தடுத்த இடங்களைப்பெற்ற நிலையில், 4வது இடத்தினை இந்தியாவை சேர்ந்த நித்யா ராமராஜ் பெற்றுள்ளார். தொடர்ந்து, 1500மீ ஓட்டத்தில் கலந்துக்கொண்ட இந்தியா நாட்டினை சேர்ந்த அஜய்குமார் சரோஜ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரையடுத்து மும்முறை தாண்டுதல் போட்டியில் கேரளாவை சேர்ந்த அபுபக்கர் அப்துல்லா தங்கம் வென்றுள்ளார்.