Page Loader
SLvsBAN : ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் இலங்கை
ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் இலங்கை

SLvsBAN : ஆசிய கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது நடப்பு சாம்பியன் இலங்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2023
10:16 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை 2023 தொடரில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற்ற இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதிய போட்டியில், இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கை அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 164 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேச அணியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ மட்டும் கடைசி வரை போராடி 89 ரன்கள் குவித்தார். இதர வீரர்கள் யாரும் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய மதீஷ பத்திரன 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Sri Lanka beats Bangladesh

சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலங்க அரைசதம்

165 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வங்கதேச பந்துவீச்சில் திணறியது. 10 ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இலங்கை இழந்தாலும், சதீர சமரவிக்ரம மற்றும் சரித் அசலங்க ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். இதில், சதீர சமரவிக்ரம 54 ரன்களும், சரித் அசலங்க 62 ரன்களையும் எடுத்தனர். இறுதியில், 39 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இலக்கை எட்டி இலங்கை கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், ஆசிய கோப்பையை நடப்பு சாம்பியனான இலங்கை அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.