ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து பந்து வீச முடிவு
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. மொத்தம் 5 போட்டிகள் அடங்கிய அந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து இன்று, இரண்டாவது போட்டிக்கான டாசில், இங்கிலாந்து வென்று, பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்த கிரிக்கெட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. பேட்டிங் செய்யப்போகும் ஆஸ்திரேலியா அணியில், ஸ்காட் போலந்துக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க்கும், இங்கிலாந்து அணியில், காயம் அடைந்த மொயீன் அலிக்கு பதிலாக ஜோஷ் டங்கும் இடம் பெற்றுள்ளனர்.