ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கால்
செய்தி முன்னோட்டம்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 தொடரில் இந்தியாவின் இளம் வீராங்கனை ஆன்டிம் பங்கால் 53 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அதே சமயம் அன்ஷு மாலிக் உள்ளிட்ட நான்கு பேர் வெண்கல பதக்கத்தை வெல்வதற்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆண்டு யு20 உலக சாம்பியனான முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனையான 18 வயதான பங்கால், காலிறுதி வரை எதிர்த்து போட்டியிட்டவருக்கு ஒரு புள்ளியை கூட விட்டுக்கொடுக்காமல் தொடர் வெற்றிகளை பெற்று வந்தார்.
அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் அக்டேங்கே கியூனிம்ஜேவாவை எதிர்த்து போட்டியிட்டதில் 8-1 என்ற கணக்கில் அவர் ஒரே ஒரு புள்ளியை மட்டும் இழந்தார்.
இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகாரி புஜினாமியை எதிர்கொள்ள உள்ளார்.
Indian women wrestlers expecting medals
வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நான்கு இந்திய வீராங்கனைகள்
57 கிலோ எடைப்பிரிவில், அன்ஷு மாலிக் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதியில் ஜப்பானிடம் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையடுத்து அன்ஷு மாலிக் மங்கோலியாவின் எர்டெனெசுவ்ட் பேட் எர்டெனை எதிர்த்து வெண்கலத்திற்காக போராட உள்ளார்.
இதனிடையே, மனிஷா (65 கிலோ), ரீத்திகா (72 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ) ஆகியோரும் வெண்கலப் பதக்கத்திற்காக போட்டியிட உள்ளார்கள்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் இந்தியா இதுவரை ஆறு பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 4 பதக்கங்களை ஆடவர் பிரிவிலும், 2 பதக்கங்களை மகளிர் பிரிவிலும் வென்றுள்ளனர்.