Page Loader
சின்சினாட்டி ஓபனில் இருந்து விலகினார் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே
சின்சினாட்டி ஓபனில் இருந்து விலகினார் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே

சின்சினாட்டி ஓபனில் இருந்து விலகினார் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2023
03:22 pm

செய்தி முன்னோட்டம்

இம்மாத இறுதியில் தொடங்கும் யுஎஸ் ஓபன் தொடருக்கு தயாராகி வரும் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே, வயிற்று வலியில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால், சின்சினாட்டி ஓபனில் இருந்து விலகியுள்ளார். 36 வயதான ஆண்டி முர்ரே, கடந்த வாரம் கனடா ஓபனில் ஏற்பட்ட காயம் காரணமாக, பாதியில் விலகினார். எனினும், சின்சினாட்டி ஓபன் தொடருக்கு முன் முழு உடற் தகுதியை பெறுவார் என நம்பிய நிலையில், அவர் இடம்பெற மாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. யுஎஸ் ஓபனுக்குப் பிறகு நடக்கவிருக்கும் பிரிட்டனின் டேவிஸ் கோப்பை அணிக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், யுஎஸ் ஓபன் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை பெற, ஆண்டி முர்ரே கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post