ஹனுமா விஹாரியின் புகாருக்கு ஆந்திர கிரிக்கெட் அமைப்பு பதில்
நடப்பு சீசனின் தொடக்கத்தில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய ஏசிஏ வற்புறுத்தியதாக குற்றம் சாட்டிய ஹனுமா விஹாரிக்கு ஆந்திர கிரிக்கெட் சங்கம் பதில் அளித்துள்ளது. ஹனுமா விஹாரி மற்றும் ஆந்திர கிரிக்கெட் சங்கம் இடையேயான மனக்கசப்பு ஏற்பட்டதையடுத்து, ஆந்திர கிரிக்கெட் வாரியம், அவருக்கு எதிராக விசாரணையை அறிவித்தது. முன்னதாக அவர் தற்போதைய சீசனின் தொடக்கத்தில் ACA அவரை கேப்டன் பதவியில் இருந்து விலகத் தூண்டியதாக குற்றம் சாட்டியிருந்ததன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஆந்திராவின் ரஞ்சி கோப்பை சீசன் திங்களன்று தோல்வியில் முடிந்தது. அதனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட ஹனுமா விஹாரி, அணியின் செயல்பாடுகளில் அரசியல் கலந்திருப்பதாகவும், மாநில சங்கத்தின் தவறான அணுகுமுறை காரணமாக மீண்டும் அணிக்காக விளையாட மாட்டேன் என்று கூறினார்.
ஹனுமா விஹாரியின் புகாருக்கு ஆந்திர கிரிக்கெட் அமைப்பு பதில்
விஹாரி, தன்னுடைய அணியில் இருந்த ஒரு ரிசர்வ் டீம்மேட்டை(அரசியல்வாதியின் மகன்) கடுமையாக சாடியதாகவும், அதன் தொடர்ச்சியாகவே அந்த ஜூனியர் வீரர் தன் தந்தையின் மூலம், விஹாரிக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியிருப்பதாக விஹாரி தெரிவித்தார். விஹாரி தனது எக்ஸ் கணக்கில், மற்ற ஆந்திர அணி வீரர்கள் கையெழுத்திட்ட தனது அறிக்கையின் நகலை வெளியிட்டார். அதில்,"முழுமையான அணிக்கு தெரியும் (அன்று என்ன நடந்தது என)" என கூறியிருந்தார். "வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், சங்கம் என்ன சொன்னாலும் அதைக் வீரர்கள் கேட்க வேண்டும் என்று சங்கம் நம்புகிறது. மேலும் அவர்களாலேயே வீரர்கள் இருக்கிறார்கள் எனவும் நம்புகிறது. எனது சுயமரியாதையை இழந்து ஆந்திராவுக்காக நான் ஒருபோதும் விளையாட மாட்டேன் என்று தீர்மானித்துள்ளேன்" எனவும் விஹாரி தெரிவித்துள்ளார். .
ஆந்திர கிரிக்கெட் வாரியம் தெரிவிப்பது என்ன?
"பெங்கால் ரஞ்சி ஆட்டத்தின் போது ஒரு குறிப்பிட்ட வீரரை திரு. விஹாரி தனிப்பட்ட முறையில் அனைவர் முன்னிலையிலும் திட்டியதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட வீரர், ACAவிடம் அதிகாரப்பூர்வ புகார் அளித்தார்" என்று ஆந்திர கிரிக்கெட் சங்கம் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தலைவர் மாற்றம் குறித்தும் சங்கம் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,"ஜனவரி 2024இல், முதல் ரஞ்சி டிராபி ஆட்டத்தைத் தொடர்ந்து, மூத்த தேர்வுக் குழுவின் தலைவரிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல், புதிய கேப்டனைப் பரிந்துரைத்தது" என குறிப்பிட்டது. மேலும், மூத்த தேர்வுக் குழுவால் புதிய கேப்டனாக ரிக்கி புய் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.