Page Loader
பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா
பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2023
05:44 pm

செய்தி முன்னோட்டம்

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இந்தியாவின் இளைய செஸ் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிப்பதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் உலகக் கோப்பை போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இதில் முதல் இரண்டு சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில், கடைசி டை-பிரேக்கர் சுற்றில் தோல்வியைத் தழுவி வெள்ளி வென்றார். இந்நிலையில், சிலர் தார் மாடல் காரை அவருக்கு பரிசளிக்குமாறு பலரும் ஆலோசனை வழங்கிய நிலையில், எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை பரிசளிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஆனந்த் மஹிந்திராவின் பதிவு