அடுத்த செய்திக் கட்டுரை

அல்லு அர்ஜுனுக்கு "புஷ்பா"ஸ்டைலில் வாழ்த்து கூறிய ஆஸி. வீரர் டேவிட் வார்னர்
எழுதியவர்
Sekar Chinnappan
Apr 08, 2023
03:46 pm
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா திரைப்படம் வெளியான பிறகு ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
இதில் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு "புஷ்பா" ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது மகளுடன் வாழ்த்து கூறியதோடு, புஷ்பாவின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுளளார்.
அவரது இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.