
ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் ஐந்து புதிய அணிகளை சேர்க்க ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
திங்கட்கிழமை (ஜூலை 3) நடந்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் ஃபெடரேஷன் கோப்பையை மீண்டும் தொடங்குவது, ஐ-லீக்கில் புதிதாக அணிகளை சேர்ப்பது என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்திய கால்பந்தின் இரண்டாம் அடுக்கு லீக் போட்டியான ஐ-லீக்கில் ஐந்து புதிய கிளப்புகள் சேர்க்கப்பட உள்ளன.
முன்னதாக, 2023-2024 சீசனில் இருந்து ஐ-லீக்கில் சேர ஐந்து நிறுவனங்கள் ஏலத்தை சமர்ப்பித்திருந்த நிலையில், கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இதன் மூலம் அடுத்த சீசனில் இருந்து ஹீரோ ஐ-லீக் போட்டியில் 15 அணிகள் பங்கேற்கும்.
aiff restores federation cup
மீண்டும் ஃபெடரேஷன் கோப்பையை நடத்த முடிவு
கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய அறிவிப்பு ஃபெடரேஷன் கோப்பையை மீண்டும் தொடங்குவதாகும். இது முதன்முதலில் 1977 இல் விளையாடப்பட்டது.
எனினும், இந்தியன் சூப்பர் லீக் மற்றும் ஐ-லீக் ஆகியவற்றுடனான கால அட்டவணையில் ஏற்பட்ட மோதலால் இது இடையில் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக சூப்பர் கோப்பை நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், தற்போது ஃபெடரேஷன் கோப்பையை மீட்டெடுக்க முடிவு செய்துள்ள ஏஐஎப்எப், இந்தியாவின் மதிப்பு மிக்க பிரீமியர் கிளப் போட்டியாக அதை நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தலைவர் கல்யாண் சௌபே, துணைத் தலைவர் என்.ஏ.ஹரீஸ், பொருளாளர் கிபா அஜய், பொதுச் செயலாளர் டாக்டர் ஷாஜி பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.