தென்னாப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்
2022 இறுதியில் நடந்த டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா படுதோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில் கேப்டன் மாற்றப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான அணியை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனாக நியமிக்கப்பட்ட எய்டன் மார்க்ரம், தென்னாப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மார்க்ரம் 2014 இல் தென்னாப்பிரிக்காவை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வெற்றிக்கு அணியை வழிநடத்தி இருந்தார். மேலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி எஸ்ஏ 20 லீக்கின் முதல் பட்டத்தை மார்க்ரம் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக டெம்பா பவுமா தொடர்கிறார்.