
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இடம்
செய்தி முன்னோட்டம்
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்துள்ள நிலையில், அதில் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது.
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அணியில் இல்லாததால், ஒயிட்-பால் வடிவ கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தெரிகிறது.
சஞ்சு சாம்சன் கடைசியாக இலங்கைக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பிறகு ஐபிஎல் 2023 சீசனில் விளையாடி 13 ஆட்டங்களில் 360 ரன்கள் எடுத்தார்.
india t20 squad for west indies series
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி
உள்ளூரில் சிறந்த திறமைசாலிகளில் ஒருவராக இருந்தாலும், சஞ்சு சாம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் பிசிசியால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளார்.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் தங்கள் ஆதங்கங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது நிலையான வாய்ப்புகளை பெறுவது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணி : இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்ய குமார் யாதவ் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அவேஷ் கான், முகேஷ் குமார்.