அணியிலும் சிக்கல்.. மைதானத்திற்கு வெளியேயும் சிக்கல்! பிரித்வி ஷாவுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கல்தா?
செய்தி முன்னோட்டம்
பிரித்வி ஷா மீதான சப்னா கில்லின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் ஏற்கனவே பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக மோசமாக செயல்பட்டு வாய்ப்பை இழந்து விட்டார்.
பிரித்வி ஷா நடப்பு ஐபிஎல்லில் ஆறு போட்டிகளில் விளையாடி 12, 7, 0, 15,0 & 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு க்கு எதிரான மோதலில் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், "இன்னும் நிறைய வீரர்கள் உள்ளனர். பிரித்வியை விட சிறப்பாக விளையாடும் டாப் ஆர்டர் பேட்டர்கள் மற்ற அணிகளில் உள்ளனர்." என அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதையடுத்த 2 போட்டிகளில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
prithvi shah didn't meet expectations of dc
எதிர்பார்ப்பை ஏமாற்றிய பிரித்வி ஷா
2022 ஆம் ஆண்டு மெகா ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட நான்கு வீரர்களில் பிரித்வி ஷாவும் ஒருவர் ஆவார்.
ஐபிஎல் 2023 தொடரில் மைதானத்தில் அவர் மோசமாக செயல்பட்டு இருந்தாலும், மைதானத்திற்கு வெளியே அவருக்கு உள்ள பிரச்சனையும் நிலைமையை சிக்கலாக்கி உள்ளது.
இதனால் இனி அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
பாண்டிங் பிரித்வி ஷாவை கழற்றி விட்ட நிலையில், அவருக்கு பதிலாக பிலிப் சால்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
பில் சால்ட்டும் இன்னும் சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை என்றாலும், அவருக்கு இன்னும் வாய்ப்பு வழங்க வேண்டும் என அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.