AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (அக்டோபர் 30) நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கான் கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி. இலங்கை : பாதும் நிசங்க, குஷால் பெரேரா, குஷால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மத்தியூஸ், மஹீஸ் தீக்ஷன, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க.