LOADING...
தொடர் புறக்கணிப்பால் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வை அறிவித்த ஆப்கான் வீரர் உஸ்மான் கானி
தொடர் புறக்கணிப்பால் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வை அறிவித்த ஆப்கான் வீரர் உஸ்மான் கானி

தொடர் புறக்கணிப்பால் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வை அறிவித்த ஆப்கான் வீரர் உஸ்மான் கானி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 04, 2023
02:05 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்கான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கானி, தனது நாட்டின் கிரிக்கெட் வாரிய செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊழலில் திளைப்பதாக குற்றம் சாட்டியுள்ள உஸ்மான் கானி, தான் அணியில் இடம் பெறாதது குறித்து தற்போதைய தலைமை தேர்வாளரிடம் எந்த விளக்கமும் இல்லாததால் நிர்வாகம் மாறியவுடன் அணிக்குத் திரும்ப விரும்புகிறேன் என்று கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இதுகுறித்து வாரியத்திடம் பேச பலமுறை முயற்சித்தும் முடியவில்லை என்று கூறினார். கானி இதுவரை 17 ஒருநாள் மற்றும் 35 டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடியுள்ளார். மேலும் கடைசியாக 2022 ஜனவரியில் நெதர்லாந்திற்கு எதிராக விளையாடினார்.

ட்விட்டர் அஞ்சல்

ஆப்கான் வீரர் உஸ்மான் கானி ட்வீட்