Page Loader
AFG vs SA: தென்னாப்பிரிக்காவிற்கு 245 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஃப்கானிஸ்தான்
தென்னாப்பிரிக்காவிற்கு 245 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஃப்கானிஸ்தான்

AFG vs SA: தென்னாப்பிரிக்காவிற்கு 245 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஃப்கானிஸ்தான்

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 10, 2023
06:03 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியை அதிக மிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்குச் செல்வதற்காவ வாய்ப்பு ஆஃப்கானிஸ்தான அணிக்கு இருந்தது. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிடி முதலில் பேட்டிங்கே தேர்வு செய்தார். ஆப்ஃகானிஸ்தான் அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஸாத்ரான் ஆகிய இருவருமே களமிறங்கினர். இருவருமே தமது சிறிய பங்களிப்பாக முறையே 25 மற்றும் 15 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா 26 ரன்களைக் குவிக்க, கேப்டானா ஹஸ்முத்துல்லா ஷாகிடி 2 ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.

ஒருநாள் உலகக்கோப்பை

இறுதி வரை போராடிய ஆஃப்கானிஸ்தான்: 

இன்றைக்கு ஆஃப்கானிஸ்தான் அணியின் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் மட்டும் நிலைத்து நின்று ஆடி 97 ரன்களைக் குவித்தார். கடந்த சில போட்டிகளில் பெரிய அணிகளுடனேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ஆஃப்கானிஸ்தான் அணி. ஆஸ்திரேலிய அணியானது மேக்ஸ்வெல்லின் சிறப்பான ஆட்டத்தால் ஆஃப்கானிஸ்தானுடனான வீழ்ச்சியில் இருந்து தப்பித்தது. சிறப்பாக ஆடி வரும் ஆஃப்கானிஸ்தான் அணியை இன்று தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர். எனினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழந்த போதும் இறுதி வரை போராடினர் ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டர்கள். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்களைக் குவித்தது ஆஃப்கானிஸ்தான் அணி. தென்னாப்பிரிக்காவிற்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.