ஆசிய கோப்பை 2023 : கவனம் ஈர்க்கும் 5 சுழற்பந்து வீச்சாளர்கள்
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த போட்டி ஹைபிரிட் முறையில் நடத்தப்படுவதால், பாகிஸ்தானில் நான்கு ஆட்டங்களும், இலங்கையில் ஒன்பது ஆட்டங்களும் விளையாடப்படுகின்றன. அக்டோபரில் இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக இது இருக்கும் என்பதால், இதில் கவனிக்க வேண்டிய ஐந்து ஸ்பின்னர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) : ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருப்பார். இலங்கையின் மெதுவான ஆடுகளங்கள் நிச்சயமாக அவரது பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். ரஷித் தற்போது ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்)
ஆசிய கோப்பை போட்டியில் பேட்டர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் மற்றொரு தலைசிறந்த ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் மர்ம சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஆவார். குல்தீப் யாதவ் (இந்தியா) : இரண்டு கடினமான ஆண்டுகளுக்குப் பிறகு, குல்தீப் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் தொடர் மூலம் மீண்டும் தனது சிறந்த நிலைக்குத் திரும்பியுள்ளார். வனிந்து ஹசரங்க (இலங்கை) : இலங்கையின் லெக் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்க கடந்த மாதம் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பல சாதனைகளை முறியடித்தார். ஷதாப் கான் (பாகிஸ்தான்) : ஷதாப் கானின் 11 முதல் 40 வரையிலான ஓவர்களில் எகானமி விகிதம் 5.05 ஆக இருப்பதால், மிடில் ஆர்டர் பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.