
PAK vs SA: தென்னாப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலக்கு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 26வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணியின் சார்பாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். 7 ஓவர்களுக்குள் குறைவான ரன்களுக்கே இருவரும் ஆட்டமிழந்து விட பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்டர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் மூன்றாவது மற்றும் நான்காவது வீரர்களாகக் களமிறங்கினர்.
இருவரும் சற்று நிலைத்து நின்றி ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். எனினும், தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சுக்கு ரிஸ்வான் 31 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
ஒருநாள் உலகக்கோப்பை
பாகிஸ்தானை கட்டுப்படுத்திய தென்னாப்பிரிக்கா:
பாகிஸ்தான் அணியின் சார்பில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷவுடு ஷக்கீல் ஆகிய இருவரும் ஆறுதல் அளிக்கும் வகையில் அரைசதம் கடந்தனர். ஷதாப் கான் 119 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 43 ரன்களைக் குவித்தார்.
பாகிஸ்தான் அணியின் பிற பேட்டர்கள் சிறிய அளவு பங்களிப்பை மட்டுமே அளித்தனர். யாரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.
தென்னாப்பிரிக்க அணியின் மார்கோ யான்சென் மற்றும் தப்ரைஸ் ஷம்சி சிறப்பாக பந்துவீசினர். 6 என்ற எக்கானமியோடு ஷம்சி 4 விக்கெட்டுகளையும், 4.78 என்ற எக்கானமியோடு யான்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 46.4 ஓவர்களில் 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். தென்னாப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலக்கா நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.