கண்களை மூடிக்கொண்டு செஸ் போர்டில் கின்னஸ் சாதனை படைத்த சிறுமி புனிதமலர்
மலேசியாவைச் சேர்ந்த செஸ் ஆர்வலரான 10 வயது சிறுமி புனிதமலர் ராஜசேகர், கண்களை மூடிக்கொண்டு 45.72 வினாடிகளில் சதுரங்கப் பலகையில் காய்களை சரியாக அமைத்து கின்னஸ் சாதனை படைத்தார். பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் கண்காணிப்பில் புனிதமலர் படிக்கும் பள்ளியில் கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்வு நடந்தது. கின்னஸ் உலக சாதனை குறித்து பேசிய அவர், தனது தந்தையே தனது பயிற்சியாளர் என்பதையும், தந்தையுடன் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் செஸ் போட்டியில் விளையாடி வந்ததாகவும் கூறினார். மேலும், இந்த சாதனை பலருக்கும் உத்வேகமாக அமையும் என்றும் கூறினார். செஸ் தவிர கணிதம் மீதும் ஆர்வம் கொண்ட புனிதமலர் எதிர்காலத்தில் விண்வெளி விஞ்ஞானியாக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மலேசிய சிறுமி கின்னஸ் சாதனை
கண்களை கட்டிக்கொண்டு செஸ் போர்டில் காய்களை அடுக்கி சிறுமி சாதனை!#SunNews | #Malaysia pic.twitter.com/WuQLGknRm4— Sun News (@sunnewstamil) September 28, 2023