Page Loader
'2000 ரூபாய் நோட்டுக்களாலேயே பணம் செலுத்துகிறார்கள்', ஸோமாட்டோவின் வைரல் ட்விட்டர் பதிவு!
ஸோமாட்டோவின் வைரல் ட்விட்டர் பதிவு

'2000 ரூபாய் நோட்டுக்களாலேயே பணம் செலுத்துகிறார்கள்', ஸோமாட்டோவின் வைரல் ட்விட்டர் பதிவு!

எழுதியவர் Prasanna Venkatesh
May 23, 2023
10:13 am

செய்தி முன்னோட்டம்

ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப்பெறுவதாக கடந்த மே 19-ம் தேதி அறிவித்தது. மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது. இந்நிலையில், உணவு டெலிவரி நிறுவனமான ஸோமாட்டோ இது குறித்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறது. அந்தப் பதிவில் 2000 ரூபாய் நோட்டு திரும்பப்பெறும் அறிவிப்பு வெளியானதில் இருந்து தங்கள் தளத்தில் செய்யப்படும் 72% Cash on Delivery ஆர்டர்களில் 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்தே பணம் செலுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்தத் தகவலை கிண்டலான தொனியில் புகைப்படத்துடன் அந்நிறுவனம் பகிர, அது தற்போது ட்விட்டரில் வைரலாகி ட்விட்டர் பயனர்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post