Loading...
3 மாதங்களில் இந்தியாவில் 34.4 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்; உலகிலேயே இதுதான் அதிகம்
3 மாதங்களில் இந்தியாவில் 34.4 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்

3 மாதங்களில் இந்தியாவில் 34.4 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்; உலகிலேயே இதுதான் அதிகம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
12:29 pm

செய்தி முன்னோட்டம்

யூடியூப் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவிலிருந்து பதிவேற்றப்பட்ட 34.4 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டை விட 28% அதிகமாக உள்ள இந்த எண்ணிக்கை உலகளவில் நீக்கப்பட்ட 1.1 கோடி வீடியோக்களில் கிட்டத்தட்ட 31% ஆகும். இதன் மூலம் வீடியோ நீக்கத்தில் உலகிலேயே இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 12.4 லட்சம் வீடியோக்களுடன் இரண்டாவது இடத்திலும் இந்தோனேசியா 9.2 லட்சம் வீடியோக்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பாதுகாப்பு விதிமீறல்கள்

குழந்தைகள் பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் தானியங்கி ஏஐ அமைப்புகளின் பங்கு

உலகளவில் நீக்கப்பட்ட வீடியோக்களில் 68.2% குழந்தைகள் பாதுகாப்பு விதிமீறல்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டவை ஆகும்.

மேலும் நீக்கப்பட்ட வீடியோக்களில் 98.6% தானியங்கி கண்டறிதல் அமைப்புகளால் முதலில் அடையாளம் காணப்பட்டவை என யூடியூப் தெரிவித்துள்ளது.

வீடியோ பதிவேற்றியவரின் ஐபி முகவரியை வைத்து நாடு அடையாளம் காணப்பட்டாலும் உள்ளடக்க நீக்கத்திற்கான காரணங்கள் நாடு வாரியாக வெளியிடப்படாமல் உலகளாவிய அளவில் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகள்

இந்திய அரசு மற்றும் நீதிமன்றங்களின் உள்ளடக்க நீக்கக் கோரிக்கைகள் 61% அதிகரிப்பு

இதனிடையே கூகுள் வெளியிட்டுள்ள வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்திய அரசு அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளடக்க நீக்கக் கோரிக்கைகள் 61% அதிகரித்துள்ளன.

இந்தியாவிலிருந்து 65,091 உள்ளடக்கங்களை நீக்கக் கோரி 4,006 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதன் மூலம் ரஷ்யா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக யூடியூப் தளம் தொடர்பாக மட்டும் 3,399 கோரிக்கைகள் வந்துள்ளன.

ADVERTISEMENT

கூகுள் நடவடிக்கை

காவல்துறை மற்றும் நீதிமன்றக் கோரிக்கைகளின் மீது கூகுள் எடுத்த நடவடிக்கைகள்

இந்தியாவிலிருந்து வந்த மொத்தக் கோரிக்கைகளில் காவல்துறை அமைப்புகள் 2,870 கோரிக்கைகளையும் நீதிமன்றங்கள் 695 கோரிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன.

இதில் அவதூறு காரணமாக மட்டும் 2,130 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனை பரிசீலித்த கூகுள் உள்ளூர் சட்ட மீறல்களுக்காக 19,883 உள்ளடக்கங்களையும் சொந்தக் கொள்கை மீறல்களுக்காக 1,415 உள்ளடக்கங்களையும் நீக்கியுள்ளது.

அதேசமயம் 19,402 உள்ளடக்கங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் 17,473 உள்ளடக்கங்களுக்கு போதுமான தகவல்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT