2025- இல் கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகள்!
செய்தி முன்னோட்டம்
2025-ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய சமையல் குறிப்புகள் (Recipes) குறித்த டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய உணவுகளான இட்லி, கொழுக்கட்டை, திருவாதிரை களி உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளது சுவாரசியம். இது தவிர ஜார்கன்ட், ஆந்திரா உணவுகளும் அதிகம் தேடப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் இதோ:
உணவுகள்
டாப் 5 அதிகம் தேடப்பட்ட உணவுகள்
1. இட்லி (Idli): தென்னிந்தியாவின் விருப்பமான இந்த உணவு, ஆரோக்கியமான காலை உணவாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2. போர்ன்ஸ்டார் மார்டினி (Pornstar Martini): இது ஒரு பழ காக்டெய்ல் பானமாகும். 2000-களின் தொடக்கத்தில் பிரபலமடைந்த இது, தற்போது மீண்டும் டிரெண்டாகியுள்ளது. 3. மோதகம் (Modak): விநாயகர் சதுர்த்தியின் போது மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்தியாவில் அதிகம் தேடப்பட்ட இனிப்பு வகை. 4. தேகுவா (Thekua): பீகார் மற்றும் ஜார்கண்ட் பகுதிகளில் சத் பூஜையின் போது தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு பிஸ்கட் போன்ற உணவு. 5. உகாதி பச்சடி (Ugadi Pachadi): ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தெலுங்கு வருட பிறப்பின் போது செய்யப்படும் அறுசுவை கலந்த பச்சடி.
மற்ற உணவுகள்
கஞ்சியும், களியும் கூட தேடப்பட்டது
6. பீட்ரூட் காஞ்சி (Beetroot Kanji): செரிமானத்திற்கு உதவும் புரோபயோடிக் நிறைந்த இந்த வட இந்திய பானம் குளிர்காலத்தில் அதிகம் தேடப்பட்டுள்ளது. 7. திருவாதிரை களி (Thiruvathirai Kali): தமிழ்நாட்டில் திருவாதிரை பண்டிகையின் போது அரிசி மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் பாரம்பரிய இனிப்பு. 8. யார்க்ஷயர் புட்டிங் (Yorkshire Pudding): மைதா, முட்டை கொண்டு செய்யப்படும் இந்த பிரிட்டிஷ் உணவு கிறிஸ்துமஸ் சமயத்தில் டிரெண்டாகியுள்ளது. 9. கோண்ட் கதிரா (Gond Katira): கோடைகாலத்தில் உடலை குளிர்விக்கப் பயன்படும் இந்த பானம் ஆரோக்கிய நன்மைகளுக்காக அதிகம் தேடப்பட்டுள்ளது. 10. கொழுக்கட்டை (Kozhukkattai): விநாயகர் சதுர்த்தியின் போது தமிழ்நாட்டில் ஆவியில் வேகவைத்து செய்யப்படும் பிரபலாமான பலகாரம்.