சில ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் கூடுதல் வாரண்டியை அறிவித்திருக்கிறது ஷாவ்மி!
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் வாரண்டி காலத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஷாவ்மி. ஷாவ்மி ரெட்மீ நோட் 10 ஷாவ்மி ரெட்மீ நோட் 10 ப்ரோ ஷாவ்மி ரெட்மீ நோட் 10 ப்ரோ மேக்ஸ் போகோ X3 ப்ரோ ஷாவ்மி Mi 11 அல்ட்ரா ஆகிய ஐந்து மாடல்களுக்கும் வாங்கிய தேதியில் இருந்து 2 வருடங்களை வாரண்டி காலமாக அறிவித்திருக்கிறது ஷாவ்மி. பொதுவாக அதன் மொபைல்களுக்கு 1 வருட வாரண்டி வழங்கப்படும் நிலையில், தற்போது கூடுதலாக ஒரு வாரண்டியை அறிவித்திருக்கிறது ஷாவ்மி.
எதற்கு கூடுதல் வாரண்டி:
எதற்கு மேற்கூறிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு வருட வாரண்டியை அறிவித்திருக்கிறது என ஷாவ்மி நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேற்கூறிய மாடல் ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதற்காக இந்த கூடுதல் வாரண்டி வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேற்கூறிய மாடல்களைக் கொண்டிருக்கும் சில பயனாளர்களின் தங்கள் ஸ்மார்போனின் மதர்போர்டு மற்றும் கேமராவில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்கள். மேலும், இந்த கூடுதல் வாரண்டி அறிவிக்கப்பட்ட பிறகும் சர்வீஸ் சென்டர்களில், ஸ்மார்ட்போனை இலவசமாக சர்வீஸ் செய்து தர மறுப்பதாகவும் அவர்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.