Loading...
நேத்து படிச்ச பாடம் மறந்துடுச்சு, ஆனா 20 வருஷ பாட்டு மனசுல இருக்கு! இதற்கான காரணம் என்ன தெரியுமா?
மூளை

நேத்து படிச்ச பாடம் மறந்துடுச்சு, ஆனா 20 வருஷ பாட்டு மனசுல இருக்கு! இதற்கான காரணம் என்ன தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2026
08:25 pm

செய்தி முன்னோட்டம்

காரில் செல்லும்போது ரேடியோவில் 20 வருடங்களாக கேட்காத ஒரு பழைய பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது. ஆனால், உங்கள் மூளை உடனடியாக பாடலின் முதல் வரியையும், பல்லவியையும் துல்லியமாக நினைவுகூர்ந்து பாடத் தொடங்குகிறது. அதே நேரத்தில், நேற்று இரவு தேர்வுக்காக படித்த கணித சூத்திரமோ அல்லது முக்கியக் குறிப்புகளோ நினைவில் இல்லாமல் மறந்துபோகிறது. மனித மூளையின் இந்த விசித்திரமான செயல்பாட்டிற்கு பின்னால் இசை, மனித உணர்ச்சிகள், தொடர் பயிற்சி மற்றும் நரம்பியல் அமைப்புகள் முக்கியக் காரணமாக அமைகின்றன.

தாள வடிவங்கள்

நினைவாற்றலுக்கு உதவும் இசையின் கவர்ச்சிகரமான தாள வடிவங்கள்

ஒரு பாடலைக் கேட்கும்போது, மூளை அதை வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக மட்டும் எடுத்துக்கொள்வதில்லை.

இசை என்பது மூளையின் ஒலி, மொழி, உணர்ச்சி மற்றும் நினைவாற்றல் சார்ந்த பல பகுதிகளை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது.

பாடலில் உள்ள தாளம் மற்றும் மெட்டு ஆகியவை தகவல்களை சேமிக்கும் கொக்கிகளாக செயல்படுகின்றன.

சீரற்ற முறையில் உள்ள 20 வார்த்தைகளை நினைவில் வைப்பது கடினம்.

ஆனால், அதே வார்த்தைகளை ஒரு பாட்டாக மாற்றும்போது மூளை எளிதாக சேமிக்கிறது.

உணர்ச்சிகரமான நினைவுகள்

தொடர்ச்சியான கேட்கும் பயிற்சியும் உணர்ச்சிகரமான நினைவுகளும்

நாம் விரும்பிப் கேட்கும் பாடலை மனப்பாடம் செய்யும் நோக்கம் இல்லாமல் நூற்றுக்கணக்கான முறை கேட்கிறோம்.

ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மூளையில் அந்தப் பாடல் தொடர்பான நரம்பு இணைப்புகள் மேலும் வலுவடைகின்றன.

மேலும், அந்தப் பாடல் நமது பள்ளிப் பருவ நினைவுகள், நண்பர்கள் அல்லது காதல் உணர்வுகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.

மனித மூளை சாதாரணத் தகவல்களை விட, உணர்ச்சிகளோடு தொடர்புடை அனுபவங்களை நீண்ட காலம் அழியாமல் நினைவில் வைத்துக்கொள்ளும் இயல்பு கொண்டது என்பதால் பாடல் வரிகள் மறப்பதே இல்லை.

ADVERTISEMENT

இசையின் உத்தி

படித்த பாடங்கள் மறக்காமல் இருக்க இசையின் உத்திகளைப் பயன்படுத்தலாம்

தேர்வுக்காக படிக்கும் பாடங்களை ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே படிப்பதால் மூளை அதை உடனடியாக மறந்துவிடுகிறது.

படித்த பாடங்கள் நினைவில் நிற்க வேண்டும் என்றால், இசையின் உத்திகளான தொடர் பயிற்சி, தாளம் மற்றும் பாடல்கள் வடிவ முறைகளை நாம் பயன்படுத்தலாம்.

சிக்கலான விதிகளையும் கருத்துகளையும் பாடல்களாகவோ அல்லது கவிதைகளாகவோ மாற்றிப் படிக்கும் போது, மூளை அதை நீண்ட கால நினைவகத்தில் சேமித்துக் கொள்கிறது.

எனவே மூளைக்குக் கவர்ச்சியான வடிவங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.

ADVERTISEMENT