நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு, இனி வாட்ஸ்அப் மூலமாகவே பணம் செலுத்தலாம்
இந்தியாவில் தனது செயலியில் மற்ற டிஜிட்டல் பேமெண்ட் வழங்குநர்களின் சேவைகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை ஒருங்கிணைக்கப் போவதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை ஈர்க்கும் ஒரு வர்த்தக மேற்பட்டு நடவடிக்கை என அந்நிறுவனம் கூறியுள்ளது. முன்னதாக, WhatsApp இல் ஷாப்பிங் செய்யும் பயனர்கள், Google Pay, Paytm மற்றும் PhonePe போன்ற செயலிகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். இப்போது, இந்தியாவின் UPI அமைப்பைப் பயன்படுத்தும் இந்த செயலிகள் பணப்பரிவர்த்தனை, நேரடியாக வாட்ஸ்அப் செயளிக்குள்ளேயே சாத்தியமாகும்.
வணிகங்களை ஈர்க்க மெட்டாவின் மாஸ்டர் பிளான்
வாட்ஸ்அப்பில் புதிய கட்டண விருப்பங்களைச் சேர்ப்பது, மெட்டாவிற்கு பணம் செலுத்த வணிகங்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா நிறுவனம் சமீபத்தில் ட்ரையல் முறையில், ஒரு சில நாடுகளில், வணிகங்களுக்கான சந்தாமுறை வெரிஃபைட் (verified) சேவையை அனுமதிக்க போவதாக அறிவித்தது. இந்தியாவில், மாதந்தோறும் சுமார் 300 மில்லியன் மக்கள் UPI(Unified Payments Interface) அமைப்பின் மூலம் சுமார் $180 பில்லியன் செலவழிப்பதால், இந்த புதிய பரிவர்த்தனை விருப்பங்கள் வணிகங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த ஊக்கமாக செயல்படும். வாட்ஸ்அப்பில் இந்த புதிய அம்சங்கள் மற்றும் கட்டண விருப்பங்களை வழங்குவதன் மூலம், இந்திய சந்தையில் அதன் நிலையை வலுப்படுத்தவும், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவற்றின் வளர்ந்து வரும் போக்கைப் பயன்படுத்தவும், Meta திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது