
குறுஞ்செய்திகளை 'எடிட்' செய்யும் வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்!
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்த குறுஞ்செய்திகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
தற்போது இந்தப் புதிய வசதியானது உருவாக்கத்தின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் பீட்டா சோதனையாளர்களுக்கு முதலில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது வாட்ஸ்அப் பீட்டா 2.23.10.13 வெர்ஷனை பதிவிறக்கம் செய்த சில பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் மற்ற பீட்டா சோதனையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதியின் மூலம் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிய 15 நிமிடத்திற்குள் அதனை எடிட் செய்ய முடியுமாம். எத்தனை முறை வேண்டுமானாலும் 15 நிமிடத்திற்குள் எடிட் செய்து கொள்ளலாம். எடிட் செய்தபின் 'எடிட்டட்' என எடிட் செய்ததைக் குறிப்பிடும் லேபிள் காட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
📝 WhatsApp beta for Android 2.23.10.13: what's new?
— WABetaInfo (@WABetaInfo) May 10, 2023
WhatsApp is releasing a feature that allows users to edit messages, and it is available to some lucky beta testers! Some iOS users may be able to get this feature, and there will be an article soon.https://t.co/Y3KwGWFV3W pic.twitter.com/1JGBMw5VLi