
டேப்லட்டிற்காக புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்!
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல புதிய வசதிகளை சோதனை செய்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது டேப்லட்டிற்காகவே புதிய வசதி ஒன்றை அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
டேப்லேட்டில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் பல சாட்களை திறந்து வைத்து சாட் செய்யும் வகையில் புதிய 'சைடு-பை-சைடு' வசதியை அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது.
சில பயனர்கள் இந்த வசதி அசௌகர்யமாக இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், வேண்டாம் என்றால் இதனை ஆஃப் செய்து சாதாரணமாக வழக்கம்போல் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் ஆப்ஷனையும் செட்டிங்கில் அளித்திருக்கிறது அந்நிறுவனம்.
இந்த வசதியை விரைவில் மற்ற டேப்லட் வாட்ஸ்அப் பயனர்களுக்கும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
📝 WhatsApp beta for Android 2.23.9.20: what's new?
— WABetaInfo (@WABetaInfo) April 29, 2023
WhatsApp is releasing an option to manage the side-by-side feature on Android tablets, and it is available to some beta testers!https://t.co/jSLwR3RVG1 pic.twitter.com/bJ4qa2gnJN