WhatsApp புதிய அப்டேட்: போன் நம்பர் தேவையில்லை, Username வசதி அறிமுகம்; உடனே ரிசர்வ் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ்அப் செயலி நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியதில் இருந்தே, ஒருவருடன் அரட்டையை தொடங்க வேண்டுமென்றால் நமது தனிப்பட்ட மொபைல் எண்ணை பகிர வேண்டியது கட்டாயமாக இருந்தது. இது பல வருடங்களாக நடைமுறையில் இருந்தாலும், புதிய நபர்களுடன் பேசும்போதெல்லாம் நமது போன் நம்பரை தருவது பலருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஆனால், இந்த நிலைக்கு தற்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தனியுரிமை சார்ந்த புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனத்தின் CEO குணால் ஷா அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்படி, பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணிற்கு பதிலாக ஒரு தனித்துவமான Username-ஐ பயன்படுத்தி மற்றவர்களுடன் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ள முடியும். ஜூன் 29 முதல் இந்த யூசர்நேம்களை முன்கூட்டியே பதிவு செய்யும் வசதி படிப்படியாக தொடங்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
your phone number is personal and sometimes you want to connect without handing it over. that's why we're introducing usernames for WhatsApp.
— WhatsApp (@WhatsApp) June 29, 2026
starting this week, you can reserve a username to use later this year when we launch the feature. It takes just a few seconds, make sure…
காரணம்
வாட்ஸ்அப்பிற்கு ஏன் இந்த யூசர்நேம் வசதி?
முற்றிலும் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காகவே இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு நெட்வொர்க்கிங் மீட்டிங், புதிய வகுப்புத் தோழர்கள், அண்டை வீட்டார்கள் அல்லது பிள்ளைகளின் விளையாட்டுப் பள்ளிக் குழுக்கள் எனப் புதிய நபர்களிடம் மொபைல் எண்ணைப் பகிர்வது பலருக்குத் தயக்கத்தை ஏற்படுத்துகிறது. இனிமேல் போன் நம்பருக்கு பதிலாக இந்த யூசர்நேம்களை மட்டும் பகிர்ந்தால் போதுமானது. இது இன்ஸ்டாகிராம் அல்லது எக்ஸ் (X) தளம் போன்ற ஒரு பொது கணக்கு அல்ல. உங்களின் துல்லியமான யூசர்நேமை தெரிந்தவர்கள் மட்டுமே உங்களுக்கு முதன்முறையாக மெசேஜ் அனுப்ப முடியும். உங்களின் யூசர்நேம்களை மற்றவர்கள் தேடிக் கண்டுபிடிக்கும் வசதியோ அல்லது வாட்ஸ்அப் மற்றவர்களுக்கு பரிந்துரைக்கும் (Suggestions) வசதியோ இதில் இருக்காது.
யூசர்நேம் கீ
'யூசர்நேம் கீ' என்றால் என்ன?
கூடுதல் பாதுகாப்பிற்காக வாட்ஸ்அப் 'Username Key' என்ற புதிய பாதுகாப்பு அடுக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு விருப்பத்தேர்வு அம்சமாகும். இதன் மூலம் ஒரு பயனர் தனக்கான பிரத்தியேக 'Key' ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். புதிய நபர்கள் யாராவது உங்களின் யூசர்நேமை பயன்படுத்தி முதன்முறையாக மெசேஜ் அனுப்ப முயன்றால், அவர்கள் இந்த 'கீ'-ஐ உள்ளிட்டால் மட்டுமே உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இந்த சாவியை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
பயன்பாடு
உங்களது வாட்ஸ்அப் யூசர்நேமை உடனே ரிசர்வ் செய்வது எப்படி?
உங்களுக்குப் பிடித்தமான யூசர்நேமை மற்றவர்கள் எடுப்பதற்கு முன்பாக, நீங்களே முன்கூட்டியே ரிசர்வ் செய்ய, முதலில் உங்களது கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் செயலியை புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்யவும். வாட்ஸ்அப் ஆப்-ஐ திறந்து, வலதுபுறம் உள்ள 'Settings' பகுதிக்குச் செல்லவும். செட்டிங்ஸ் பக்கத்தில் உள்ள 'Account' என்ற ஆப்ஷனைத் தட்டவும். அங்கு தற்பொழுது புதிதாகத் தோன்றும் 'Username' என்ற பகுதியைத் தேர்வு செய்து, உங்களுக்கு தேவையான (கிடைக்கக்கூடிய) யூசர்நேமை டைப் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளவும். வாட்ஸ்அப் யூசர்நேம்கள் அதிகபட்சமாக 35 கேரக்டேர்ஸ் வரை நீளமாக இருக்கலாம். இதனை எப்போது வேண்டுமானாலும் மாற்றவோ அல்லது நீக்கவோ முடியும்.
பிரைவசி
முக்கிய விதிமுறைகள் மற்றும் பயன்பாடுகள்
போலி கணக்குகள் மற்றும் ஆள்மாறாட்டங்களைத் தவிர்க்கும் பொருட்டு, புகழ்பெற்ற பொது நபர்கள் மற்றும் பிரபலங்களின் யூசர்நேம்களை வாட்ஸ்அப் நிறுவனமே முன்கூட்டியே லாக் செய்து வைக்கும். நிறுவனங்கள் மற்றும் கிரியேட்டர்கள் தங்களின் தற்போதைய இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் கணக்குகளின் பெயர்களிலேயே வாட்ஸ்அப் யூசர்நேம்களையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய மாற்றத்தால் உங்களது தற்போதைய சாட்கள் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படாது. உங்களது பழைய தொடர்புகள் எப்போதும் போல உங்களுடன் பேச முடியும். மேலும் பிளாக் செய்தல், ரிப்போர்ட் மற்றும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் வழக்கம் போலச் செயல்படும்.