Page Loader
'சாட் லாக்'குக்கு இரகசியக் குறியீடு.. புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
'சாட் லாக்'குக்கு இரகசியக் குறியீடு.. புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

'சாட் லாக்'குக்கு இரகசியக் குறியீடு.. புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 09, 2023
10:27 am

செய்தி முன்னோட்டம்

மெட்டாவை தாய் நிறுவனமாகக் கொண்ட வாட்ஸ்அப் நிறுவனமானது, தங்களது பயனாளர்களின் பயன்பாட்டு அனுவபவத்தை மேம்படுத்த பல்வேறு புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சாட் லாக் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது வாட்ஸ்அப் நிறுவனம். இந்த வசதியைக் கொண்டு குறிப்பிட்ட சாட்களை மட்டும் தனியாக லாக் செய்து அதனை பாஸ்வேர்டைக் கொண்டு திறந்து பயன்படுத்தலாம். தற்போது லாக் செய்யப்பட்ட சாட்களுக்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், இரகசிய குறியீடு ஒன்றையும் லாக் செய்யப்பட்ட சாட்களுக்குப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி ஒன்றை சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பின் புதிய வசதி: 

சாதாரணமாக கடவுச்சொல்லைப் போல இல்லாமல், ஏதாவது ஒரு வார்த்தை அல்லது ஒரு எமோஜியைக் கூட லாக் செய்யப்பட்ட சாட்களுக்கான இரகசியக் குறியீடாகப் பயன்படுத்த முடியும். மேலும், நாம் லாக் செய்யப்பட்ட சாட்களைக் கொண்ட குறிப்பிட்ட வாட்ஸ்அப் கணக்கை எந்த சாதனத்திலிருந்து பயன்படுத்தினாலும், அந்த லாக் செய்யப்பட்ட சாட்களில் இரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழைய முடியும் வகையில் புதிய வசதியை வடிவமைத்திருக்கிறது அ்ந்நிறுவனம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சேனல்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது வாட்ஸ்அப். தற்போது உலகமெங்கும் இருக்கும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த வசதியை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.