வாட்ஸப் மெசேஜ்-ஐ தவறுதலாக டெலீட் செய்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்!
வாட்ஸப் இப்போது புதிதாக ஒரு அப்டேட்டை தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. 'Accidental delete ' என்கிற இந்த புதிய அம்சம், தவறுதலாக டெலீட் செய்யப்படும் மெசேஜ்-ஐ திரும்ப பெற உதவுகிறது. எனினும் ஒரு கால அளவை நிர்ணயித்து உள்ளது. அதற்குள்ளாக இந்த வசதியை பயன்படுத்தினால் மட்டுமே, டெலீட் செய்த மெசேஜ்-ஐ திரும்ப பெறலாம். ஏற்கனவே 'Delete for Everyone ' மற்றும் 'Delete for Me' என இரு வசதிகள் வாட்ஸாப்பில் ஏற்கனவே உள்ளது. இந்த புதிய வசதிப்படி, ஒரு செய்தியை 'delete ' செய்தபின், உங்களுக்கு ஐந்து வினாடி ஒதுக்கப்படும். தவறுதலாக 'delete ' செய்திருந்தால், அதை மறுபரிசீலனை செய்து கொள்ளலாம்.
வாட்ஸப்பின் அடுத்த அப்டேட்
இந்த வசதி, புதிய பயனர்களுக்கு அமலில் இருந்து வந்தது. இப்போது ஆன்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் செய்திகள் வெற்றிகரமாக நீக்கப்படுவதற்கு, நீங்களும், பெறுநர்களும் வாட்ஸப்பின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்த வேண்டும். iOS வாட்ஸப்-ஐ பயன்படுத்துபவர்கள், வாட்ஸாப்பிலிருந்து செய்தி நீக்கப்பட்ட பிறகும், நீங்கள் அனுப்பிய மீடியாவை, அவர்களின் புகைப்படங்களில் சேமித்து வைத்திருக்கலாம். பெறுநர்கள் உங்கள் செய்தியை நீக்குவதற்கு முன்பு படித்துவிட்டாலோ, அல்லது நீக்குவது வெற்றிபெறவில்லை என்றாலோ, உங்களுக்கு அறிவிப்பு வராது. குழுவில் அனுப்பும் செய்தியை, அனைவருக்கும் டெலீட் செய்வதற்கு, சுமார் 2 நாட்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. மற்ற குழு பங்கேற்பாளர்கள் அனுப்பிய செய்திகளை நீக்கும் அதிகாரம், குழு நிர்வாகிகளுக்கு மட்டுமே உள்ளது. எனினும், குழு நிர்வாகியால் நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுக்க முடியாது.