47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன?
உலகளவில் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் தேவைக்கு ஏற்ப அடிக்கடி புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது. அதே சமயம் பாதுகாப்பிற்காகவும் அப்டேட்களை செய்து வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி மாதம் 45 லட்சம் கணக்குகளும், ஜனவரி மாதம் 29 லட்சம் கணக்குகளும் முடக்கியுள்ளனர். தொடர்ந்து, மார்ச் 1ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 47,15,906 பேரின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் விதிகளை பின்பற்றாததால் முடக்கப்பட்டதாக, 4,720 பேரிடம் இருந்து புகார்கள் வந்ததாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.