2023 -இல், கூகிளில் உங்கள் முதல் தேடல் என்னவாக இருக்கும் என கூகிள் கேள்வி; மக்களின் வினோத பதில்கள் இதோ
புதுவருடம் பிறக்கவிருப்பதை ஒட்டி, கூகிள் நிறுவனம், தனது பயனாளர்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தது. "2023 ஆம் ஆண்டின் உங்கள் முதல் கூகுள் தேடல் என்னவாக இருக்கும்?". இந்த கேள்வியை, கூகுள், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது. ட்விட்டர் பயனாளிகள், எப்போதும் போல, கேலி, வேடிக்கை, நம்பிக்கை மற்றும் விமர்சனம் ஆகியவற்றின் கலவையுடன் கேள்விக்கு, பதில்களை தந்தனர். சுவாரஸ்யமான சில பதில்கள் இதோ: பல பயனர்கள், 2023 இல் கூகிள் மூலம் தேடும் முதல் விஷயம் OpenAI இன் ChatGPT என்ற செயலி பற்றி என பதிலளித்தனர். இந்த செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட், இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கூகுளுக்கு மாற்றாகக் கருதப்படுகிறது.
2023 -இல் கூகிள்-இல் உங்கள் முதல் தேடல் என்னவாக இருக்கும்?
கூகிள்
சிலர், கூகுளில் பணிபுரிவதில் தங்கள் ஆர்வத்தைக் காட்டினர். "கூகிள்-இல் நுழைவு நிலை வேலையை எப்படிப் பெறுவது?", "கிளவுட் இன்ஜினியராக கூகிள்-இல் நுழைவது எப்படி" சிலர், 'பிக்சல் டேப்லெட் வெளியீட்டு தேதி', 'எப்போது @Huawei மற்றும் @கூகிள் மீண்டும் ஒன்றாக இணையப் போகிறார்கள்' போன்ற தலைப்புகளில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். "எதுவும் செய்யாமல் பில்லியனர் ஆவது எப்படி" என்று ஒரு பயனர் எழுதினார். இன்னும் சிலர், "ட்விட்டர்-இன் CEO எலன் மஸ்க் எப்போது பதவி விலகுவார்?", என வேடிக்கையாக கேட்டுள்ளனர். இந்த ட்வீட் போடப்பட்ட சில நிமிடங்களிலேயே, 50,000 க்கும் மேற்பட்ட வியூஸ்களையும், 2000 க்கும் மேற்பட்ட லைக்களையும் பெற்றது.