தினசரி 6 ரூபாய் டெபாசிட்டில் 1 லட்சம் காப்பீடு! குழந்தைகளுக்கான திட்டம்
செய்தி முன்னோட்டம்
காப்பீடு திட்டம் என்பது இந்தியாவில் முக்கியமான ஒன்று. பல நடுத்தர குடும்பங்களுக்கு காப்பீடு திட்டங்கள் பற்றி அதிகம் அறிந்து இருப்பதில்லை.
ஆனால், காப்பீடு திட்டம் ஆனது எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும் போது நமக்கு பெரிது உதவுகிறது.
எனவே, பல காப்பீடு திட்டங்கள் இருந்தாலும், இங்கே தபால் துறையின் சிறந்த காப்பீடு திட்டத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.
இத்திட்டத்தின் படி வெறு 6 ரூபாய் செலுத்தி 1 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.
பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம்
பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில், குழந்தைகளுக்காக வழங்கப்படும் ஆயுள் காப்பீடு திட்டமாகும்.
காப்பீடு திட்டங்கள்
குழந்தைகளுக்கான பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் - பலன்கள் என்ன?
இந்த திட்டத்தின்படி பெற்றோர்கள் ஒரு நாளுக்கு வெறும் 6 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு அசம்பாவிதம் நேர்ந்து உயிரிழக்க நேரிட்டால் 1 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
அதேப்போன்று இதில், குழந்தைகளிடையே சேமிப்பு பழக்கம் மற்றும் நிதி ஒழுக்கத்தை ஊக்குவிக்க பயன்படுகிறது.
குழந்தைகள் நேரடியாகவே தபால் நிலையங்களுக்கு சென்று சேமிக்கும் பழக்கமும் உருவாக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறைகள்
விண்ணப்பிக்க பெற்றோர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்று பால் ஜீவன் பீமா யோஜனா படிவத்தை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும்.
குழந்தைகள் 8 வயது முதல் 12 வயதில் உள்ள குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். 18 வயது வரும் வரை இந்த காப்பீடு செல்லுப்படியாகும்.