Page Loader
வீடியோ: Xiaomi நிறுவனத்தின் போர் அறையை பார்த்திருக்கிறீர்களா?

வீடியோ: Xiaomi நிறுவனத்தின் போர் அறையை பார்த்திருக்கிறீர்களா?

எழுதியவர் Sindhuja SM
Jul 10, 2024
06:05 pm

செய்தி முன்னோட்டம்

நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமியின்(Xiaomi) CEO லீ ஜூன் கடந்த ஜூலை 9ஆம் தேதி தங்களது தொழிற்சாலையின் சுற்றுப்பயண வீடியோவை வெளியிட்டார் மேலும், தங்களது தொழிற்சாலையில் என்னெல்லாம் நடக்கிறது என்பதையும் அவர் அந்த வீடியோவில் விளக்கியுள்ளார். சியோமி நிறுவனத்தின் மையப்பகுதியான போர் அறையையும் அவர் சுற்றி காட்டியுள்ளார். அந்த போர் அறை குறித்து பேசிய சியோமி CEO லீ ஜூன், "சியோமி ஹைப்பர் IMP(Intelligent Manufacturing Platform) என்பது தொழிற்சாலையின் மூளையாகும். இது சிக்கல்களை முன்கூட்டியே தீர்த்து, உற்பத்தியை மேம்படுத்துகிறது." என்று கூறியுள்ளார். சியோமி ஹைப்பர் IMP தொழிற்சாலையின் மூளையாக உள்ளது என்று அவர் விளக்கினார். அந்த அமைப்பின் மூலம், நிறுவனத்தின் பொறியாளர்கள் உற்பத்தி மற்றும் திட்டமிடல் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

 சியோமி நிறுவன CEO வெளியிட்ட வீடியோ