தினமும் 6 மணி நேரம் இலவச டேட்டா - புதிய ப்ளானை அறிமுகப்படுத்திய வோடபோன்
தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் யூஸர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், தக்க வைக்கவும், பல ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஜியோவுக்கு ஈடு கொடுக்க மற்ற நிறுவனங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆபர்களை அள்ளி வீசி வருகின்றன. அந்த வகையில், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் புது ஆபர்கள் போலவே, போஸ்ட்பெய்ட் சிம் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த பிளானை வோடோபோன் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, போஸ்ட்பெய்ட் பயனாளர்களுக்கான முக்கியமான ரீசார்ஜ் பிளான் தான், ரூ.401 சவுத் ப்ளான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்லிமிடெட் வாய்ஸ் இலவச இன்டர்நெட் என புதிய ப்ளானை அறிமுகப்படுத்திய வோடபோன்
பின், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், இலவச 3000 எஸ் எம் எஸ்கள், 50ஜிபி டேட்டா, 200ஜிபி மாதாந்திர டேட்டா ரோல் ஓவர் வசதி ஆகியவை உள்ளன. இதில் 50ஜிபி டேட்டா முடிந்தால் அடுத்த ஒவ்வொரு ஜிபி டேட்டாவுக்கும் ரூ.20 செலுத்த வேண்டி இருக்கும். இந்த ரீசார்ஜில் முக்கிய அம்சமாக இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான 6 மணி நேரத்திற்கு அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இத்தோடு, சேர்ந்து சன் நெக்ஸ்ட் ப்ரீமியம் HD சேவைக்கான ஒரு வருட சந்தாவும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.