Page Loader
eSIM-க்கு பதிலாக இனி ஸ்மார்ட்போன்களில் வரும் iSIM: எப்படி செயல்படும்?
eSIM-க்கு பதிலாக விரைவில் வரும் iSIM

eSIM-க்கு பதிலாக இனி ஸ்மார்ட்போன்களில் வரும் iSIM: எப்படி செயல்படும்?

எழுதியவர் Siranjeevi
Mar 02, 2023
10:12 am

செய்தி முன்னோட்டம்

இன்றைய நவீன டெக்னாலஜியில் ஸ்மார்ட்போன்களில் பல வசதிகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆண்ட்ராய்டு போன்கள் செயல்திறன் மற்றும் சார்ஜிங் வேகம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல், நெட்வொர்க்குகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் சந்தையில் விரைவாக உருவாகி வருகின்றன. எனவே, பல ஆண்டுகளாக, அழைப்புகளைச் செய்வதற்கும் டேட்டா நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதற்கும் பிசிக்கல் சிம் கார்டுகளை பயன்படுத்துகிறோம். பின் டெக்னாலஜி மாற மாற, இந்த போக்கு eSIM க்கு மாறியது. இதனிடையே இப்போது, ​​Integrated SIM அல்லது iSIM எனப்படும் ஸ்மார்ட்போன்களுக்கான அடுத்த தீர்வுக்கு Qualcomm தயாராக உள்ளது. இவை வழக்கமான சிம்கள் மற்றும் eSIM ஐ விட iSIM அதிக ஆற்றல் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

சிம் கார்டு

eSIM-க்கு பதிலாக வரும் iSIM - என்ன பலன்?

iSIM இல் சிறந்த ஸ்பீக்கர்கள் அல்லது அதிர்வுக்காக மற்றொரு மோட்டாரைச் சேர்ப்பது போன்ற அம்சங்களுக்கு அதிக இடம் உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் சிப்செட்டின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பில் ஐசிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் காண்பிப்பதன் மூலம் குவால்காம் மற்றும் தேல்ஸ் ஆகியவை iSIM தொழில்நுட்பத்திற்கான வழக்கை முன்வைக்கின்றன. இவை நானோ சிம்மை விட இது 100 மடங்கு சிறியது. மொபைல் சாதனங்களுக்கான நெட்வொர்க் இணைப்பின் எதிர்காலமாக iSIM அறிவிக்கப்படுவதாக தொழில்துறை அறிக்கைகள் கூறுகின்றன. 300 மில்லியனுக்கும் அதிகமான iSIM ஃபோன்கள் 2030-க்குள் அனுப்பப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.