விவோவின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 'X90 ப்ரோ'.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
செய்தி முன்னோட்டம்
ஆப்பிள் மற்றும் சாம்சங்குடன் போட்டியிடும் வகையில் தங்களது ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'X90 ப்ரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது விவோ.
வசதிகள்:
6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
டைமன்சிட்டி 9200 ப்ராசஸர்
50MP+50MP+12MP ரியர் கேமரா: 32MP செல்ஃபி
கேமரா 4870 mAh பேட்டரி
120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்: 50W வயர்லெய் ஃபாஸ்ட் சார்ஜிங்
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ்
ஆண்ட்ராய்டு 13
விலை: 12 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.84,999
மொபைல் ரிவ்யூ
பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
X80 ப்ரோவின் அப்டேட்டட் ஸ்மார்ட்போனாக வெளியாகியிருக்கிறது விவோ X90 ப்ரோ.
ஃப்ளாக்ஷிப்பான மொபைலில் அனைத்து அம்சங்களையுமே ஃப்ளாக்ஷிப்பாகவே கொடுத்திருக்கிறது விவோ.
அமோலெட் டிஸ்பிளே தான் எனினும், X80 ப்ரோவில் கொடுத்ததைப் போல LTPO பேனலை X90 ப்ரோவில் கொடுக்கவில்லை.
கால் ஆஃப் ட்யூட்டி, அசால்ட் 9 லெஜன்ட்ஸ் உள்ளிட்ட கேம்கள் ஹை-கிராஃபிக்ஸ் மோடில் எந்த விதமான பிரச்சினையும் தாக்குப்பிடிக்கிறது இதன் ப்ராசஸர். ஆனால், மிகவும் இன்டென்சான கேம்கள் ஆடும் போது மொபைல் கொஞ்சம் சூடாகிறது.
பேட்டரி பெர்ஃபாமன்ஸ் சிறப்பாகவே இருக்கிறது. மேலும், 29 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடுகிறது.
ஃப்ளாக்ஷிப் போனுக்கே உரிய கேமரா பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கிறது X90 ப்ரோ. எனினும், இன்னும் சில இடங்களில் மேம்படுத்தலாம்.