இந்தியாவில் வெளியானது புதிய 'விவோ T2 ப்ரோ 5G' ஸ்மார்ட்போன்
இந்தியாவில் புதிய 'T2 ப்ரே 5G' ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ. கடந்த மாதம் இந்தியாவில் வெளியான 'ஐகூ Z7 ப்ரோ 5G'யின் ரீபேட்ஜ்டு வெர்ஷனைப் போல இருக்கிறது இந்தப் புதிய 'T2 ப்ரோ 5G'. புதிய T2 ப்ரோவில், 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தை வெளிப்படுத்தக்கூடிய கூடிய 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. 8GB என்ற ஒற்றை ரேம் தேர்வுடனும், 126GB மற்றும் 256GB என இரண்டு ஸ்டோரேஜ் தேர்வுகளுடனும் வெளியாகியிருக்கிறது புதிய T2 ப்ரோ. பின்பக்கம் 64MP+ 2MP டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 16MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
விவோ T2 ப்ரோ 5G: ப்ராசஸர் மற்றும் விலை
புதிய T2 ப்ரோ 5G-யில் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது விவோ. 25,000 ரூபாய்க்குள்ளான ஸ்மார்ட்போன் பிரிவில், மிகவும் வேகமான செயல்பாட்டைக் கொண்ட ஸ்மார்ட்போன் இது எனவும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய, 4,600mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கும் இந்த T2 ப்ரோவானது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் OS 13 இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது. 5G, வை-பை, ப்ளூடூத் 5.3, GPS உள்ளிட்ட கணெக்டிவிட்டி வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த T2 ப்ரோ 5G ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியன்டான 8GB+128GB வேரியன்டை ரூ.23,999 விலையிலும், 256GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை ரூ.24,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது விவோ. செப்டம்பர் 29 முதல் இதன் விற்பனை தொடங்குகிறது.