பணம் வாங்க QR Code-யை இப்படி பயன்படுத்தாதீங்க! மொத்த பணமும் போய்விடும்; எச்சரிக்கை
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், அதில் சில சிக்கல்களும் மோசடிகளும் ஏற்படுகிறது. எனவே நாம் அதனை கவனமாக கையாள வேண்டும். யுபிஐ என்பது ஒருவரின் மொபைல் போன் வழியாக ஒரு பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து இன்னொரு பேங்க் உடனடியாக பணத்தை மாற்ற UPI அனுமதிக்கிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமே ஆப்ஸின் மூலம் பணம் செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24x7 அடிப்படையில் செயல்படுகிறது. இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளை எளிதாக்க பயன்படுத்தப்படுவது அந்த செயலியில் உள்ள QR Code தான். இந்த QR Code என்பது உங்கள் யூபிஐ செயல்பாடுகளில் மொத்த விஷயத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒன்று. எனவே QR Code விவகாரத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
QR Code-யை இப்படி செயல்படுத்த வேண்டாம் - எச்சரிக்கை
UPIஇல் முக்கிய ஆப்ஷனாக உள்ள QR ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணத்தை பெற QR ஸ்கேன் செய்ய தேவையில்லை. பணம் வேண்டுமென்றால் இந்த QR கோடை ஸ்கேன செய்யவும் என யாராவது சொன்னால் நாம் உஷாராக வேண்டும். ஏனென்றால், ஸ்கேனை வைத்து உங்கள் அக்கவுண்ட் பணத்தை மொத்தமாக எடுக்கவும் வாய்ப்புள்ளது. உங்கள் அக்கவுண்டில் இருந்து பணத்தை மற்றொருவருக்கு அனுப்ப மட்டுமே UPI பின்னை பதிவிட வேண்டும். மேலும், யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பின்னர் அனுப்பவும். UPI பின்னை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனை வேறு யாருடனும் பகிர கூடாது.