போன்பே மற்றும் கூகுள்பே சேவைத் தளங்களுக்கு சவாலாக அறிமுகமாகியிருக்கும் யுபிஐ பிளக்இன்
தற்போது வரை பெரும்பாலான யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள, போன்பே அல்லது கூகுள் பே உள்ளிட்ட மூன்றாம் தரப்பு சேவைத் தளங்களை பல்வேறு வணிகத் தளங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மூன்றாம் தரப்பு சேவைத் தளங்களின் உதவியில்லாமல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் புதிய யுபிஐ பிளக்இன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மெய்நிகர் கட்டண முகவரி (Virtual Payment Address) ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம், மூன்றாம் தரப்பு சேவைத் தளங்களுக்குச் செல்லாமல், தங்களுடைய தளங்களிலேயே நேரடியாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை நிறுவனங்கள் வழங்க முடியும். ஆனால், இந்தப் புதிய முறையானது பயனில்லாத ஒன்று என போன்பே நிறுவனத்தின் CTO-வான ராகுல் சாரி தனது வலைப்பூவில் தெரிவித்திருக்கிறார்.
மூன்றாம் தரப்பு யுபிஐ சேவைத் தளங்களுக்கு புதிய சவால்:
இன்றைய தேதியில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளில் 57% வணிக நிறுவனங்கலுக்குச் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகள் தான். அவற்றில் பாதி ஆன்லைன் வணிகத் தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவது. ஆன்லைன் வணிகத் தளங்கள் மூன்றாம் தரப்பு யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைத் தளங்களான போன்பே மற்றும் கூகுள் பேயைப் பயன்படுத்தால், புதிய யுபிஐ பிளக்இன்னைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது மேற்கூறிய நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக அமையும். மூன்றாம் தர யுபிஐ சேவைத் தளங்களைப் பயன்படுத்தும் போது பணப் பரிவர்த்தனையின் தோல்வி விகிதமும் சற்று அதிகமாக இருக்கிறது. இது யுபிஐ-யின் பயன்பாட்டையும் பாதிக்கும். புதிய யுபிஐ பிளக்இன் வசதியின் மூலம், யுபிஐ பணப் பரிவர்த்தனையின் வெற்றி விகிதத்தை 15% வரை அதிகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.