
வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய வசதிகள்!
செய்தி முன்னோட்டம்
சில நாட்களுக்கு முன்பு தான் நான்கு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிடத் தொடங்கியது அந்நிறுவனம். இந்நிலையில், மேலும் பல புதிய வசதிகளை அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சாட்டை லாக் செய்யும் வசதி:
இந்த வசதியை தற்போது சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம். இதன் மூலம், நாம் வாட்ஸ்அப்பை முழுவதுமாக லாக் செய்யாமல் முக்கியமான நபர்களுடனான சாட்டை மட்டும் லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும்.
பாஸ்வேர்டு தெரிந்தால் மட்டுமே சாட்டை அன்லாக் செய்ய முடியும். அதனையும் மீறி அன்லாக் செய்யவேண்டும் என்றால், அந்த சாட்டின் உள்ளே அனைத்து டெலிட் ஆகும் வகையில் வடிவமைத்திருக்கிறது வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்பின் புதிய வசதிகள்:
மேலும், கூடுதல் பாதுகாப்பிற்காக அந்த சாட்களில் அனுப்பப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் கேலரியில் சேமிக்கப்படாது எனவும் கூறப்படுகிறது.
கால் நோட்டிபிகேஷனிலேயே மெஸேஜ் செய்யும் வசதி:
வாட்ஸ்அப்பின் கால் நோட்டிபிகேஷனிலேயே, அக்சப்ட் மற்றும் டிக்லைன் ஆப்ஷனுடன் ரிப்ளை ஆப்ஷனையும் சேர்க்கவிருக்கிறது வாட்ஸ்அப்.
இதனை பயன்படுத்துவதன் மூலம் நோட்டிபிகேஷனிலேயே குறுஞ்செய்தியுடன் வாட்ஸ்அப் காலை டிக்லைன் செய்ய முடியும்.
பேஸ்புக்கோடு ஸ்டேட்டஸை பகிரும் வசதி:
வாட்ஸ்அப்பில் நாம் பகிரும் ஸ்டேட்டஸ்களை, அப்படியே பேஸ்புக்கிலும் பகிரும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பகிரும் ஸ்டேட்டஸ் மற்றும் பதிவுகளை பேஸ்புக்கில் பகிரும் வசதி இருக்கிறது. அதைப் போலவே வாட்ஸ்அப்பிலும் புதிய வசதியை கொண்டு வரவிருக்கிறது அந்நிறுவனம்.