NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்த டிசம்பரில் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த டிசம்பரில் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் 
    இந்த டிசம்பரில் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்

    இந்த டிசம்பரில் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 02, 2023
    03:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இது.

    ஐகூ 12 5G:

    இந்தியாவில் குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்பைக் கொண்டு வெளியாகவிருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இந்த ஐகூ 12. ஐகூ 12 மற்றும் ஐகூ 12 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டிருந்தது அந்நிறுவனம்.

    சீன வெளியீட்டைத் தொடர்ந்து வரும் டிசம்பர்-12ம் தேதியன்று இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஐகூ.

    144Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, பின்பக்கம் ட்ரிபிள் கேமரா செட்டப் மற்றம் அதிவேக சார்ஜிங் ஆகிய வசதிகளுடன் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

    ஸ்மார்ட்போன்

    ரெட்மி 12C: 

    இந்த மாதம் வெளியாகவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுள் ஒன்று இந்த ரெட்மி 12C. ரூ.15,000 விலைக்குள், வரும் டிசம்பர் 6ம் தேதி இந்த ரெட்மி 12C ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ரெட்மி.

    மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ ப்ராசஸர், 50MP டூயல் கேமரா செட்டப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரி ஆகிய அம்சங்களுடன் வெளியாகவிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

    ரியல்மி C67 5G:

    இந்தியாவில் 5G வசதியுடன் இந்த மாதம் வெளியாகவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்த ரியல்மி C67 5G. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

    யுனிசாக் T612 ப்ராசஸர் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளுடன் வெளியாகவிருக்கிறது இந்தப் பஸ்மார்ட்போன்.

    ஸ்மார்ட்போன்

    டெக்னோ ஸ்பார்க் கோ 2024: 

    கடந்த மாதம் உலகளவில் வெளியிடப்பட்ட தொடக்கநிலை ஸ்மார்ட்போனான டெக்னோ ஸ்பார்க் கோவை வரும் டிசம்பர் 4ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது டெக்னோ நிறுவனம்.

    ரூ.7,000 விலைக்குள் இந்தியாவின் தொடக்கநிலை ஸ்மார்ட்போன் பிரிவின் புதிய அறிமுகமாக வெளியாகவிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

    ஒன்பிளஸ் 12 5G:

    இந்த மாதம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வெளியீடு இந்த ஒன்பிளஸ் 12. குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்புடன் வரும் டிசம்பர் 5ம் தேதி சீனாவில் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன்.

    சீன வெளியீட்டைத் தொடர்ந்து அடுத்த மாதம் 24ம் தேதி உலகளவில் வெளியிடப்படவிருக்கிறது இந்த ஒன்பிளஸின் ப்ளாக்ஷிப். ஸ்மார்ட்போன் பயனாளர்களால் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் வெளியீடும் இதுதான்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    ரெட்மி
    ரியல்மி
    ஒன்பிளஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் புதிய C51 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது ரியல்மி ரியல்மி
    இந்தியாவில் 'ஹானர் 90' ஸ்மார்ட்போன் வெளியீடு மூலம் மீண்டும் கால்பதிக்கும் ஹானர் கேட்ஜட்ஸ்
    இன்று உங்கள் தொலைபேசியில் அவசர எச்சரிக்கை வந்ததா? இதோ அதன் அர்த்தம் ஆண்ட்ராய்டு
    சாம்சங் S23 FE ஸ்மார்ட்போன், என்னென்ன வசதிகளுடன் வெளியாகலாம்? சாம்சங்

    ரெட்மி

    12C ஸ்மார்ட்போன் மாடலில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெட்மி ஸ்மார்ட்போன்
    எப்படி இருக்கிறது ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ்?: ரிவ்யூ கேட்ஜட்ஸ் ரிவ்யூ
    இந்தியாவில் வெளியானது ரெட்மி 12 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன்

    ரியல்மி

    உலகில் அதிவேகமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட் போன் இதுவா? Realme GT Neo 5 ஸ்மார்ட்போன்
    ரியல்மி 10 Pro 5G கோகோ-கோலா எடிஷன் - ஸ்மார்ட்போனின் சிறப்புகள்; ஸ்மார்ட்போன்
    POCO X5 Pro vs Realme 10 Pro+ எது சிறந்த ஸ்மார்ட்போன்? ஸ்மார்ட்போன்
    Realme 9i 5G ஸ்மார்ட்போன் ரூ,999 வாங்கமுடியுமா? செம்ம ஆஃபர்! தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ்

    டிசம்பரில் 5-ல் அறிமுகமாகும் ஒன்பிளஸின் ஃப்ளாக்ஷிப் 'ஒன்பிளஸ் 12' ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025