மத்திய பட்ஜெட்டில் AIஐ வளர்ச்சிக்கு மூன்று சிறப்பு மையங்கள்: திட்டத்தின் நோக்கம்
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் நிதியாண்டின் நேற்று (பிப். 1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அறிக்கையில் பல விதமான தாக்கல்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், Make AI in India மற்றும் Make AI work for India திட்டத்தை செயல்படுத்த சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார். எனவே, AI தொழில்நுட்பம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அதற்கான மையங்கள் தொடங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்த மையங்கள் நிறுவப்படும். மேலும், முன்னணி கல்வி நிறுவனங்களில் சிறப்பு மையங்கள், AI இல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும்.,
AI திட்டத்தின் முக்கிய நோக்கம் மற்றும் அம்சங்கள் என்னென்ன்ன?
நாட்டை எதிர்காலத்திற்கு தயார்படுத்தவும் உதவும். இதுமட்டுமின்றி, அரசு பணிகள் மூலம் AI இன் பயன்பாட்டை மையம் ஏற்கனவே ஊக்குவித்து வருகிறது. தொடர்ந்து, இந்த மையம் விவசாயம், சுகாதாரம் மற்றும் நிலையான நகரங்களில் நடைமுறை AI பயன்பாடுகளை ஆராய்ச்சி செய்து மேம்படுத்துவதே இந்த மையங்களின் முதன்மையான குறிக்கோளாக இருக்கும். இத்திட்டங்களுக்கு, அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கு 7931.05 கோடி ரூபாயும், உயிர் தொழில்நுட்பவியல் துறைக்கு 2683.86 கோடி ரூபாயும், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறை 5746.51 கோடி ரூபாயும் என மூன்று பிரிவுகளாக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. AI, மற்றும் இயந்திர கற்றல் போன்ற புதுமையான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.