LOADING...
மேம்பட்ட அம்சங்களுடன் e-Aadhaar செயலி அறிமுகம்; முக்கியத்துவம் என்ன?
மேம்பட்ட அம்சங்களுடன் e-Aadhaar செயலி அறிமுகம்

மேம்பட்ட அம்சங்களுடன் e-Aadhaar செயலி அறிமுகம்; முக்கியத்துவம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 10, 2025
04:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டைதாரர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்புடன் கூடிய அனுபவத்தை வழங்குவதற்காக புதிய e-Aadhaar செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி மூலம் பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாகவும் காகிதமற்ற வடிவிலும் பயன்படுத்தலாம் என்று UIDAI தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. இந்தச் செயலி தற்போதுள்ள mAadhaar செயலிக்கு மாற்றாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் அட்டையைப் பதிவிறக்கம் செய்தல், பிவிசி அட்டைக்கு ஆர்டர் செய்தல் போன்ற mAadhaar இல் உள்ள சில அம்சங்கள் இதில் இல்லை. எனினும், e-Aadhaar செயலி, பயனர்கள் தங்கள் ஆதார் தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கவும், காட்சிப்படுத்தவும் மற்றும் சரிபார்க்கக்கூடிய வடிவத்தில் (Verifiable Credential Format) பகிரவும் அனுமதிக்கிறது.

சிறப்பம்சங்கள்

இந்தச் செயலியின் முக்கியச் சிறப்பம்சங்கள்

தரவு கட்டுப்பாடு: பயனர்கள் தாங்கள் பகிர விரும்பும் குறிப்பிட்ட தகவல்களைத் தேர்வு செய்து, மற்றவற்றை மறைத்து வைக்க முடியும். பல சுயவிவரங்கள்: தங்கள் முதன்மை அட்டையுடன் இணைக்கப்பட்ட ஒரே மொபைல் எண்ணைக் கொண்டு, அட்டைதாரர்கள் இந்தச் செயலியில் ஐந்து ஆதார் அட்டைகள் வரை சேமித்து வைக்கலாம். பாதுகாப்பு: பயோமெட்ரிக் பூட்டு மூலம் தரவைப் பாதுகாக்கும் வசதி உள்ளது. மேலும், QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய இச்செயலியைப் பயன்படுத்தலாம். புதிய e-Aadhaar செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும், முக அங்கீகாரம் மூலமும் எளிதாகச் செயல்படுத்தலாம்.